Dial for books
February 20th, 2012

நம் காலத்து நாயகன் கமல் – துக்ளக் புத்தக அறிமுகம்

nam kaalaththu nayakan

கமல் நம் காலத்து நாயகன், ஆசிரியர் – மணா, உயிர்மை பதிப்பகம், விலை: ரூ 350/-
Dial for books – 94459 01234 | 9445 97 7 97

பத்திரிகையாளரும், பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகளின் இயக்குனருமான இந்நூலாசிரியர், ‘நதி மூலம்’ என்ற தனது முந்தைய ஒரு நூலில் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள சில முக்கியப் பிரபலங்களைப் பற்றிக் களப்பணி செய்து, சுவாரஸ்யமான தகவல்களைத் தொகுத்து வெளியிட்டார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலில், தமிழ்த் திரையுலகின் சகலகலா வல்லவராகத் திகழும் கமல்ஹாசனைப் பற்றி ஆழமாகவும், விரிவாகவும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

5 வயதுப் பையனான கமல்ஹாசன் ஒரு சினிமா விருந்து நிக்ழச்சியின்போது, தனது துடிப்பான செயல்பாடுகளால் ஏ.வி.எம். செட்டியாரைக் கவர்ந்து, அதன் மூலம் ‘களத்தூ கண்ணம்மா’ திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல், இன்று வரையிலான அவரது சினிமா வாழ்கையையும், சாதனைகளையும் சுவாரஸ்யமான தகவல்களோடு தொகுத்துள்ளார் இந்நூலாசிரியர்.

தவிர, கமல்ஹாசனைக் குறித்து அவரது உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நடிக- நடிகையர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள்… என அனைத்துத் தரப்பினரும் கூறிய சுவையான செய்திகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, கமல்ஹாசனை பற்றி பல்வேறு இதழ்களிலும், உடகங்களிலும் வெளியான அவரது பேட்டிகள், கட்டுரைகள், புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் இந்நூலாசிரியர் கடும்சிரத்தையுடன் தொகுத்து, இந்நூலை உருவாக்கியுள்ளது பாராட்டத்தக்கது.

- பரக்கத் (துக்ளக்)

புத்தகத்தின் பின்னட்டைலியிருந்து:

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப் பற்றிய பதிவு இது. ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத்தன்மை கொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒரு தனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன். மணாவின் கடும் உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்முடன் பேசுகிறார்கள். இது கமலின் சரித்திரம் அல்ல, கமலின் வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-200-8.html
புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க: Dial for books: 94459 01234 | 9445 97 97 97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy this password:

* Type or paste password here:

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Anti-Spam Protection by WP-SpamFree